Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Kanthanatha Swamy Temple, Earakaram, Thanjavur

அருள்மிகு ஸ்ரீ கந்தநாத ஸ்வாமி திருக்கோவில், ஏரகரம், தஞ்சாவூர்


Arulmigu Kanthanatha Swamy Temple, Earakaram, Thanjavur!!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ கந்தநாத ஸ்வாமி

இறைவி :ஸ்ரீ சங்கரநாயகி அம்பாள்

தல மரம் : மரம்

தீர்த்தம் : தீர்த்தம்

ThanjavurDistrict_KanthanathaSwamyTemple Erakaram_shivanTemple


அருள்மிகு ஸ்ரீ கந்தநாத ஸ்வாமி திருக்கோவில், ஏரகரம், தஞ்சாவூர்

இந்தக் கோயிலை திருநாவுக்கரசர், கச்சியப்ப முனிவர், குமரகுருபர சுவாமிகள்,அருணகிரிநாதர், நக்கீரர் ஆகியோர் புகழ்ந்து பாடியுள்ளனர். இந்தத் திருத்தலம் 12-ம் நூற்றாண்டில் விக்கிரம சோழரால் கட்டப்பட்டது எனகூறப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு மூக்கு வாக்கு சித்திஸ்தலம் என்ற பெயரும்உண்டு. அது பற்றி கூறப்படும் கதை: குலோந்துங்க மன்னனுக்கு மூக்கு இல்லாமல் குழந்தை பிறந்தது. இதனால் மனம்வருந்திய மன்னன் ஜோதிடர்கள் கூறியதன் பேரில் ஸ்ரீஸ்கந்தரை வேண்டிக்கொண்டதனால் அந்தக் குழந்தைக்கு மூக்கு வந்ததால் முக்கு வாக்கு சித்திஸ்தலம் என்றபெயர் உண்டானது. மன்னனின் கண் நோயையும் இந்த இறைவன் தீர்த்து வைத்தார்.

ஆலய அமைப்பு :

கோவில் அமைப்பு: நான்கு புறமும் மதிற்சுவருடன் ஒரு முகப்பு வாயிலைக் கொண்டும், ஒரு பிராகாரத்துடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலைக் கடந்தால் ஒரு நீண்ட மண்டபம் நேரே இறைவன் சந்நிதிக்குச் செல்கிறது. நீண்ட மண்டபத்தின் முகப்பிலேயே வலதுபுறம் தெற்கு நோக்கியவாறு அம்பாள் சங்கரநாயகியின் சந்நிதி அமைந்துள்ளது. மண்டப முகப்பில் இடதுபுறம் நர்த்தன விநாயகர் காட்சி தருகிறார். கருவறைக் கோஷ்டத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி கண்டு தரிசிக்க வேண்டும். நவக்கிரக சந்நிதியும் இவ்வாலயத்தில் உள்ளது.

திருக்கோயில் முகவரி :

அருள்மிகு ஸ்ரீ கந்தநாத ஸ்வாமி திருக்கோவில்,
ஏரகரம், தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் ,



திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.



அமைவிடம்:

கும்பகோணம் - திருவையாறு சாலையில் மேலக்காவேரியை அடுத்து, "யானையடி" என்னுடத்தில் திரும்பும் சாலையில் ஏரகரம் 3 கி.மீ. என்ற பெயர்ப் பலகையுள்ளது. அச்சாலையில் சென்றால் ஏரகரம் கோயிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்து சுமார் 5 கி.மி. தொலைவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலமான இன்னம்பரில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் சாலை வழியில் வலதுபுறம் ஏரகரம் செல்லும் சாலை பிரிகிறது. அவ்வழியாகச் சென்றும் ஏரகரம் அடையலாம். இன்னம்பர் மற்றும் திருப்புறம்பியம் தலங்களிலிருந்து சுமார் 3 கி.மி தொலைவில் உள்ளது.